2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உணவு ஒவ்வாமை; சிறுவன் பலி; நால்வர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கணவாய் உணவு ஒவ்வாமையால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சே ர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி, மாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இம்மாதம் 18ஆம் திகதி, வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாய் வாங்கி, உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் ஆகியோரைத் தவிர, குடும்பத்தவர்கள் ஐவர், அன்றையதினம் பகல் உணவு சாப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. 

தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ள மேற்படி ஐவரும், நோய் குணமடையாத நிலையில் திங்கட்கிழமை குறித்த  சிறுவன், சிறுவனின் தாத்தா, பாட்டி ஆகியோர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று (23) பகல் உயிரிழந்துள்ளான் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை, மாமா ஆகியோரும் தற்போது மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர் எனவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X