Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்ற 3 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளடங்களாக 15 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள உணவகமொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (19) சமைக்கப்பட்ட பகலுணவை உட்கொண்டவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.
இன்று சனிக்கிழமை (20) காலை தொடக்கம் திடீர் சுகயீனமுற்ற இவர்கள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வந்ததாகவும் இவ்வாறு 25 பேர் இதுவரை வந்துள்ளதாகவும் அவர்களில் 15 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன், ஏனையோர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் மற்றும் மயக்கம் போன்றன இவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பகலுணவைத் தயாரித்து விற்பனை செய்த உணவகத்துக்குச் சென்று அங்கு ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தியதுடன், உடனடியாக உணவகத்தை மூடியுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
அத்தோடு, பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இங்கு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் விசாரணை செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago