2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உன்னிச்சை குளத்தில் இருவர் சடலங்களாக மீட்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு - உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், 16 வயதுடைய சிறுவன் திங்கட் கிழமை சடலமாக மீடக்கப்பட்டார், மற்றுமொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்.

உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X