2025 மே 14, புதன்கிழமை

உப தபாலகத்துக்கான காணிப் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிக்கை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, சித்தாண்டியிலுள்ள உப தபாலகத்துக்கான காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதுடன், கட்டட வசதியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் எம்.செல்லத்துரை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமாரிடம் மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வியடம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த செல்லத்துரை, “குறித்த தபாலகம் அமைந்துள்ள காணி, முன்னாள் அமைச்சர் வி.நல்லையாவால் மக்களின் பொதுநலன் சார்ந்த நடவடிக்கைளுக்காக வழங்கப்பட்டது. அக்காணியை செங்கலடி பிரதேச சபை பொறுப்பேற்றுள்ளது.

“தபாலகம் பயன்படுத்தும் கட்டடம் வசதியற்று மக்கள் பயன்பாட்டுக்குரிய வசதிகள் குறைவாகக் காணப்படுகிறது.

“இதே வகையில் காணி வழங்கப்பட்டு தற்போது வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகில்லுள்ள காணியில் அமைந்திருக்கும் நெசவு நிலையம் இருந்த காணி தரிசு நிலமாகக்கிடக்கிறது.

“இக்காணியில் தபாலகக் கட்டடம் அமைக்கப்படுமாயின், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பயன் பெறுவர். எனவே, இரு காணிகள் தொடர்பாகவும் பரிசீலனை மேற்கொண்டு, மக்கள் பயன்பெற ஆவன செய்ய வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X