Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
வெல்லாவெளி கமநலசேவைப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதில் தாமதிப்பதாகத் தெரிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் தங்களுக்கான உரத்தை வழங்கவேண்டுமெனக் கோரி கமநலசேவை நிலையத்துக்கு முன்னால் விவசாயிகள் இன்று (24)ஒன்றுதிரண்டனர்.
அப்பகுதி விவசாயிகளுக்கான உரமானியம் விதைத்து ஒருமாதமாகியும் அதிகமான விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, பசளை தட்டுப்பாடாக இருப்பதால் ஏக்கருக்கு குறைந்த அளவில் பசளை வழங்கப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு வருகை தந்த வெல்லாவெளிப் பொலிஸார், விவசாயிகளை கூடி நிற்காமல் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் குறைந்த அளவான விவசாயிகளே கமநலசேவை நிலையத்தில் நிற்குமாறும் அறிவுத்தினர்.
இது தொடர்பாக வெல்லாவெளி கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் முகமட் பாயிஸிடம் வினாவியபோது, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 3,500 ஏக்கர் நெற்காணி இருப்பதுடன், இதில் அரைவாசி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிவிட்டதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் போதியளவான உரம் தற்போது இல்லையெனவும் தெரிவித்தார்.
தற்போது அனைத்து விவசாயிகளும் ஒரேநேரத்தில் உர மானியத்தை வழங்கவேண்டுமெனக் கோரியதால் இருக்கின்ற உரம் போதாமையால், கொழும்பில் இருந்து உரத்தைப் பெற்றுக்கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் இம்மாதத்துக்குள் உரத்தை வழங்குவதுடன், குறைந்த அளவு உரம் வழங்கப்பட்ட விவிசாயிகளுக்கும் மிகுதியாக வழங்கவேண்டிய உரத்தையும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
05 May 2025