2025 மே 01, வியாழக்கிழமை

‘உரிமையை எவராலும் தடுக்கமுடியாது’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

“தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது, தடுக்கவும் கூடாது” என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.  

மேற்படி பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன், ஊடக அறிக்கையொன்றை இன்று (21) வெளியிட்டுள்ளார்.

“தியாகி திலீபனுடைய 33ஆவது நினைவு நாள்கள் ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில், தமிழர்கள் அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ் உயர் அதிகாரியும் கூறியது மட்டுமின்றி, பல்வேறு வழிகளாலும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். தமிழர்கள் மீதான உச்சகட்ட ஜனநாயக அடக்குமுறை இதுவாகும்.

“புதிய அரசாங்கத்தில், தமிழர்கள் மீதான இவ்வாறான ஜனநாயக உரிமை மீறலானது, இன்று சர்வதேசத்தின் பார்வைக்கு ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது” என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது; தடுக்கவும் கூடாது என்று எமது பேரவையினர் வலியுறுத்துவதுடன், அஞ்சலி செலுத்தும் விடையத்தில் இந்த அரசாங்கம் ஜனநாயகத்தன்மையுடன், நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும்.

“இல்லையென்றால், தமிழர்கள் அகிம்சை ரீதியாக இந்த அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும்” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .