2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் மாதிரிக்கிராமங்கள் உருவாக்கப்படும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், ஒவ்வொரு வகையான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் மாதிரிக்கிராமங்களாக மாற்றப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

இவ்வாறு மாற்றப்படும் பட்சத்தில் மக்களின் பொருளதாரத்தை இலவாக உயர்த்த முடியும் என்பதுடன் குறித்த பிரதேசத்துக்கு சென்றால் குறித்த பொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையை கொள்வனவாளர்களிடம் ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு  புளியம்பத்தை கிராமத்திலுள்ள கால்நடை வைத்தியர் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அலிக்கம்பை கிராமத்தை ஆடுவளர்ப்பிற்காக பயன்படுத்த முடியும். புளியம்பத்தையில் கோழி வளர்ப்பை மேற்கொள்ள முடியும் . அதேபோல் ஆலையடிவேம்பு பிரிவில் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் ஒவ்வொரு பிரிவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திட்டங்கள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை மக்கள் முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், ஆலையடிவேம்பை வளம் மிக்க பிரதேசமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X