Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாநகரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில், மட்டக்களப்பு வாவியும் இன்னும் மரபுரிமைமிக்க இடங்களையும் சுகாதாரத்துடன் அழகுறப் பேணினால் மாநகரசபை மேலும் வருமானத்தை ஈட்டலாம் என, மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு, மேயர் தி. சரவணபவன் தலைமையில் நேற்று (18) நடைபெற்றபோது, நிலையியற் குழுக்களின் தலைவர்களது உரைக்கான நேரத்தில், அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வாவியின் மேல் மிதக்கும் உணவகத்தால் சுற்றுலா நலன்நோம்புத் துறையைச் செயற்படுத்துவதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு, சபைக்கு மட்டுமல்லாது நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளும் கிடைக்குமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago