2025 மே 19, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவஞ்சலி

Editorial   / 2018 மார்ச் 07 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவஞ்சலி, வவுணதீவு பொதுக் கட்டட மண்டபத்தில், நேற்று (06) நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள், வவுணதீவு மக்கள், அமைப்புகள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி நினைவஞ்சலியில், மறைந்த ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்னாரின் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

ஊடகவியலாளர்  இரத்தினசிங்கம், 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி கரடியனாற்றில் முகாமிட்டிருந்த விசேட அதிரடிப்படையினர், வவுணதீவு பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X