Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு எதிராக, கிரான் பிரதேசத்தில், இளைஞர்களால் நேற்று (11) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டு குடும்பங்களுக்கிடையிலான கைகலப்பையடுத்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கூலித்தொழிலாளர்கள் இருவரை, பொலிஸ் கூண்டில் அடைப்பதற்குக் காரணமாகவிருந்தார் என்றும், அதனை கண்டித்தே, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, இளைஞர்கள் தெரிவித்தனர்.
கிரான் சுற்று வளைவு மையத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர், பதாதைகள் சிலவற்றை ஏந்திக்கொண்டு, எம்.பியின் உருவபொம்மையை தூக்கிக்கொண்டே, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பதாதைகளில், “தமிழரசு கட்சியே ஏழைகளை சிறையில் வைப்பதா”, “இது உங்களது அரசியல் வங்குரோத்தா”, “எழுவது நாம் வீழ்வது நீர்”, “தமிழர்கள் என்ன மடையர்களா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
கண்டனப் பேரணியின் இறுதியில், எம்.பியின் உருவப் பொம்மை நடுவீதியில் வைத்து எரியூட்டப்பட்டது.
சிறிநேசன் எம்.பி கருத்து
ஆர்ப்பாட்டம் தொடர்பில், சிறிநேசன் எம்.பியுடன் தொடர்ப்புகொண்டு கேட்டபோது,
“மணல் அகழும் குழுவினர், வயல் ஒன்றுக்குள் சென்று கடந்தவாரம் மணல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வயல் பள்ளமாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆத்திரமடைந்தவர்கள், மணல் அகழ்ந்த நபரின் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாதிக்கப்பட்டவர் தமக்கு நியாயம் கிடைக்கவேண்டுமெனத் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டனர்” என்றார்.
இதுதொடர்பில், ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரியுடன் தொடர்புகொண்டு, இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்த அவர், “பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அறிகின்றேன்” என்றார்.
“எனினும், அதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கி, அதில் குளிர்காய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago