Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரச்சினை தொடர்பில் இரு மாவட்ட தமிழ் மக்களும் முரண்படாமல்பேசி தீர்க்க முன்வர வேண்டுமென, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ச.ராஜன் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை, எந்த அரசியல்வாதிகளும் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாதெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில், “அம்பாறை மாவட்டத்தின் எல்லையென்பது, அங்கு வாழும் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கின்ற, தக்கவைக்கின்ற பகுதியாக காணப்படுகின்றது.
“இந்த வகையில், மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களும் ஒத்துழைத்து, தங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், இரு பிரதேசங்களுக்கு இடையில் இருக்கின்ற எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்கவேண்டிய ஒரு கடப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
“அரசியலைநோக்காக கொண்டு, சில அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இந்த எல்லை தொடர்பில் பொய்யான, போலியான பிரச்சினைகளை ஏற்படுத்தி, இரு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
38 minute ago
39 minute ago