Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 12 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தம் முடிந்து தற்போது 10 வருடங்களான போதும்;, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்கள், பல்வேறு பிரச்சினைகளுடன்;; வாழ்ந்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது என, சொன்ட் அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின்; வலையமைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களுக்கான திட்ட இணைப்பாளர் தர்மரெட்னம் விஜயகுமார், இன்று தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று -பதுளை வீதியை அண்டி, கொடுவாமடுவிலிருந்து பெரியபுல்லுமலைவரை சுமார் 20 கிராமங்களில் வசித்துவரும்; மக்களின் பிரச்சினைகள், தீர்க்கப்படாமல் தொடர்வதாக சிவில் அமைப்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக அமைப்புகள்; உள்ளிட்ட சுமார் 15 சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்துள்ளனர்.
காட்டு யானைகளின் தொல்லை, குடிநீர் பிரச்சினை, வீதிகள் சீரின்மை. மேய்ச்சல்தரையில் அத்துமீறல், அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமை, கருங்கல் சுரங்கங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், மணல், காட்டு மரங்கள் ஆகியவை அழிக்கப்படல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு -பதுளை பிரதான வீதியிலிருந்து மாவளையாறு, இராஜபுரம், சின்னப் புல்லுமலை கிராமங்களுக்குச் செல்வதாயின், சுமார் 3 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.
இந்த வீதிக்கு 300 மீற்றர் முதல் 500 மீற்றர் தூரம் வரையே கொங்கிரீட் இடப்பட்டுள்ளது. ஏனைய வீதி சேதமடைந்து காணப்படுகின்றது.
யானைத் தடுப்பு வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ், கற்பானைக்குளம் முதல் தும்பாலச்சோலை, உறுகாமம் முதல் வடிச்சல்வரையான இடங்கள் 2 மாதங்களுக்கு முன்னர் துப்புரவு செய்யப்பட்டது. ஆனால், இன்னமும் யானைத் தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago