Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்க் கோட்டக் கல்வி அதிகாரியாக சேகுதாவூத் அப்துல் றஸ்ஸாக் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (16) தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இப்பிரிவின் கோட்டக் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிவந்த ஐ.எல்.மஹ்ரூப் சேவையிலிருந்து ஓய்வுபெற்றதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார்.
இக்கோட்டப் பிரிவில் கடந்த 3 மாதங்களாக கோட்டக் கல்வி அதிகாரிக்கான பதவி வெற்றிடம் இருந்து வந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி இதற்கான நேர்முகப் பரீட்சை திருகோணமலை மாகாண கல்விப் பணிமனையில் நடைபெற்றது.
தற்போது கோட்டக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள அப்துல் றஸ்ஸாக் 1988 ஆம் ஆண்டு ஆசிரிய சேவைக்குத் தெரிவாகி; 12 வருடங்கள் ஆசிரியராகவும், 17 வருடங்கள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
இறுதியாக அல்-முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் 3 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அப்பாடசாலையிலிருந்து 65 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர் என்பது இங்கு குறிப்படத் தக்கது.
இது அந்தப் பாடசாலையின் நூறு வருட வரலாற்றில் கல்வி உயர் அடைவு மட்டம் என்று கருதப்படுகின்றது.
6 minute ago
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
16 minute ago