2025 மே 26, திங்கட்கிழமை

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தீ

Suganthini Ratnam   / 2017 மே 18 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்கராஜா சபேஷ்

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று   நண்பகல் திடீரென்று தீ பரவியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கேட்போர் கூடத்தில் ஆசியர்களுக்கு கருத்தரங்கு  நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்த  வேளையில், அங்குள்ள மின் விசிறி ஆளியை அழுத்தியபொழுது திடீரென தீ பிடித்ததாக  ஏறாவூர்ப்பற்றுக் கோட்டம் 1 இன் கல்விப் பணிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இருப்பினும், பாரியளவில் சேதம் ஏற்படாத வகையில் உடனடியாகத் தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவத்தினால் ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ எவ்வித பாதிப்பும்  ஏற்படவில்லை.  குறித்த கட்டடமும்; மின்சார உபகரணங்களுமே தீக்கிரையானதாகவும் அவர் கூறினார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X