2025 மே 14, புதன்கிழமை

‘ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளதாக, அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு நடைபெறும் முதலாவது பேராளர் மாநாடு இதுவாகும்.

இந்த மாநாட்டில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி உபட்பட கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் கட்சியின் நாடளாவிய ரீதியுள்ள முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து, இப்பேராளர் மாநாட்டின் போது ஆராயவுள்ளதாகவும் பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .