2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய  ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. 

அந்தவகையில், மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில், பாலைநகர் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில், வீட்டுத் தோட்டம் அமைத்தலும், விதைகள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது, தோட்டம் செய்யும் நபர்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்துக்கான கத்தரி, மிளகாய்,  வெண்டி, போஞ்சி, பாகல் போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X