2025 மே 15, வியாழக்கிழமை

ஒக்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தக்காக ஆற்றுப்படுத்தல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒக்டிசம் மூலம் பாதிக்கப்பட்டிருப்பவர்களை, சமூகத்தக்காக ஆற்றுப்படுத்த வேண்டியதும் அவர்களுக்கான வழிகாட்டல்கள், ஆலோசனைகளை வழங்க வேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் இருக்கிறதென, மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் தெரிவித்தார்.

“ஒக்டிசம்” எனப்படும் தற்சிந்தனை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, முன்பள்ளிகளுக்கு இணைத்துக் கொள்ளல் தொடர்பாக, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வொன்று, மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (01) நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே, மாவட்ட உதவிச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவிக்கையில், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஒக்டிசம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற பிள்ளைகளை எவ்வாறு அணுகுவது, வழிப்படுத்துவது போன்ற விடயங்களை அறிந்து கொள்ளவேண்டியது கட்டாயமாகுமெனத் தெரிவித்தார்.

உண்மையில் சமூகத்தில் பல்வேறுபட்ட நோய்கள், வலுவிழந்தவர்கள், தாக்கங்களுக்குட்பட்ட பலரை நாங்கள் காண்கின்றோம். அவ்வாறானவர்கள் எவ்வாறு சமூக மயப்படுத்தி, வழிதவறிச் செல்வதிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திறவுகோலைப் பெறுவதற்கான இவ்வாறான பயிற்சிகள் அமைகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .