2025 ஜூலை 16, புதன்கிழமை

ஓட்டமாவடியில் மேலும் 16 தொற்றாளர்கள் அடையாளம்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன், எம்.எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு - கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக, இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்றாளர் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

ஏற்கெனவே, கடந்த சனிக்கிழமை (24)  பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுடன் தொடர்புபட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைகளில் உறுதியாகியிருப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களாக இதுவரை 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X