2025 மே 03, சனிக்கிழமை

கசிப்பு நிலையங்கள் தொடர்ந்தும் முற்றுகை

Editorial   / 2020 மே 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றும் விற்பனை நிலையமொன்றும், மதுவரித் திணைக்களத்தால், நேற்று முன்தினம் (13) முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட  பகுதிகளிலேயே, இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்கரச்சி என்னும் பகுதியில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10,000 மில்லிலீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், அது தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில், கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு தயார் நிலையில், 2 பரல்களில் இருந்த சுமார் 2,50,000 மில்லிலீற்றர் கோடாவும் மீட்கப்பட்டது. அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி மதுவரித் திணைக்கள ஆணையாளர் கே.தர்மசீலனின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மதுவரித் திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான குழுவினர், இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X