2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கச்சான் காற்றால் மீனவர்கள் பாதிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கடுமையாக வீசி வரும் கச்சான் காற்று என்று அடைமொழியில் அழைக்கப்படும் காற்று காரணமாக, கடல் மற்றும் வாவி மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காற்று காரணமாக கடல் மற்றும் வாவி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியுள்ளனர். வாவியில் பாரியளவில் அலைகள் எழுவதால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடப்பாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் கருத்து வெளியிடுகையில், 'இம்மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ பெயர்ச்சி காற்று கடுமையாக வீசிவருகின்றது.

இக்காற்றை இப்பிரதேச மக்கள் கச்சான் காற்று என அழைக்கின்றனர். கடுமையான வெப்பத்துடன் இக்காற்று வீசுகின்றது' என்று தெரிவித்தார்.

அடுத்த மாதம் இறுதி வரை இக்காற்று வீசும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X