Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 21 பசுமாடுகளுடன் ஏறாவூர் ஐயன்கேணியில் வைத்து, நேற்று வியாழக்கிழமை (04) மாலை, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மாடுகள் கடத்திவரப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இந்த மாடுகள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றைக் கடத்தி வந்தவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள், இறைச்சிக்காக அறுக்கும் நோக்குடன் அனுமதிப்பத்திரமின்றி இம்மாடுகளைக் கடத்தி வந்துள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்திருப்பதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.
கைதான மூவரும் 19, 34, மற்றும் 40 வயதுடைய ஏறாவூர், இலுப்படிச்சேனை மற்றும் பன்குடாவெளிக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago