Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளான 286 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்தியக் கலாநிதி கே.தர்சினி தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் பொதுச் சுகாதார அதிகாரிகள்;, பொலிஸார், மருத்துவ மாதுக்கள் உள்ளிட்டோருக்கான அறிவுறுத்தல் கூட்டம்;, மட்டக்களப்பு பொதுச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த வருடம் இம்மாவட்டத்தில் 1,040 பேர் டெங்கு நோய்த்; தொற்றினால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இவ்வருடத்தில் 8 மாதங்கள் கடந்த நிலையில் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் பொதுச் சுகாதார அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் உள்ளிட்டோரின் குழுவான சோதனையே ஆகும் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் 3 உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

7 minute ago
9 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
17 minute ago
26 minute ago