Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கடற்கரைத் தூய்மைப்படுத்தும் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்கரைப் பிரதேசங்களைத் தூய்மைப்படுத்தி, இயற்கையைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தை, கரையோரம் பேணல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கடற்கரையில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.
தூய்மையான கடற்கரையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது, இன்றைய தலைமைமுறையினரின் முக்கிய கடமை என்ற காரணத்தால் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கரையோரம் பேணல் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் எஸ். கோகுலதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 minute ago
34 minute ago
34 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
34 minute ago
34 minute ago
47 minute ago