2025 மே 03, சனிக்கிழமை

‘கட்சியில் இணைய உத்தரவாதம் கோரினார் வெள்ளிமலை’

Editorial   / 2020 மே 11 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

தமிழரசுக் கட்சியில் இணைய ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மாகாண சபை வேட்பாளர் உத்தரவாதம் கோரினார் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியில் இணைவதாயின் ஏற்கெனவே இருந்த கட்சியிலிருந்து நீங்கியமை தொடர்பான கடிதத்தைப் பகிரங்கப்படுத்தத் தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் அவ்வாறு செய்யவில்லை எனவும் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அவர் கட்சியில் இணைவதாயின் மாகாண சபை வேட்பாளர் உத்தரவாதம் கோரப்பட்டபோது, அதனை உரிய நேரத்தில் தான் தீர்மானிக்க முடியும் என்று தான் தெரிவித்த பின்னர் தமது கட்சியில் இணைவது தொடர்பில் அவர் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லையெனவும்  பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தமிழரசுக் கட்சியில் இணைய முற்பட்டபோது, கட்சியில் உள்வாங்க முடியாது என்று தெரிவித்ததாக, அவரால் வெளியிடப்பட்ட செய்திக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X