Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த வேளை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி பலியான தனது கணவனின் சடலத்தையும் அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தையும் பெற்றுத் தருமாறு, பலியானவரின் மனைவி உருக்கமான பொது வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவெம்பு 2 எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி நேசராஜா (வயது 38) என்பவரே இவ்வாண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பலியானார் என, அவரது மனைவி ஹேமமாலினி (வயது 42) தெரிவித்தார்.
விபத்து நடந்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டபோதிலும் தனது கணவரின் உடலை, அந்நாட்டு அதிகாரிகள், இறுதிக் கிரியைகளுக்காக தன்னிடம் அனுப்பி வைக்கவில்லை என்றும் இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்துக்கும் அறியத் தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago