Niroshini / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைபற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிலையமும் 'முத்தான வியர்வை' எனும் தொனிப் பிரிவில் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை ஹைறாத் வீதியில் நடைபெற்றது.
பிரதேச திவிநெகும முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பீ.குணரட்னம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.நௌபல், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது,85 திவிநெகு பயனாளிகளின் விற்பனை கண்காட்சி கூடங்களில் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன் திவிநெகு பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இக்கண்காட்சியும் காட்சிக் கூடமும் இன்றும் நாளையும் இடம்பெறும் என்று திவிநெகும சமுக அபிவிருத்தி உத்pதயோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் தெரிவித்தார்.

28 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
47 minute ago