Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 02 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
வடக்கிலிருந்து சுமார் 750 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட கதிர்காமம் திருத்தலத்தை நோக்கிய பாதயாத்திரையானது மட்டக்களப்பு, ஆரையம்பதி கந்தசுவாமி கோவிலை இன்று காலை சென்றடைந்து.
கடந்த மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள செல்வச்சந்நிதி கோவிலிலிருந்து ஆரம்பமாகிய இப்பாதயாத்திரையில், 150 பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இம்மாதம் 13ஆம் திகதி உகந்தை காட்டு வழியாக கதிர்காமம் நோக்கிச் செல்லும் பக்தர்கள், எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கதிர்காம முருகன் கோவில் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள்.
52 நாட்களைக் கொண்ட இப்பாதையாத்திரையில் மூவின மக்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட வேண்டி பாதயாத்திரையில் கலந்துகொண்டுள்ள வழிபாட்டில் ஈடுபடுவதாக பாதயாத்திரைக்கான ஏற்பாட்டாளர் எம்.வேல்வேந்தன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
32 minute ago
46 minute ago