2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கனேடிய உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் மட்டக்களப்புக்கு விஜயம்

Editorial   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் டேனியல் வூட், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைர் அலுவலகத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின்  செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் சர்ந்த பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், எதிர்காலத்தில் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, கனேடிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், சமூகங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள், மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் ஊடாக தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை கனேடிய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X