Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கம்பஹா மாவட்டத்திலிருந்து ஒரு வாரத்துக்குள்ளோ, தற்போதோ மட்டக்களப்பு மாவட்டத்துக்கு யாராவது வருகை தந்திருந்தால், உடனடியாக அறியத்தாருங்கள் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளப்படுத்தப் படவில்லை எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கம்பஹா மாவட்டத்திலிருந்து மட்டக்களப்புக்கு யாராவது வருகை தந்து, வீடுகளிலோ அல்லது அயலிலோ உங்களுக்குத் தெரிந்த இடத்திலோ, ஒரு வாரத்துக்குள் அல்லது தற்போது சமூகமளித்திருப்பின் அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகரிடமோ உடனடியாக அறிவிக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.
இது தொடர்பில், யாரும் தேவையில்லாமல் குழப்பமடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்ட அவர், “சுய சுகாதார நடைமுறைகளை நாங்கள் மேற்கொள்ளாத பட்சத்தில், எங்களையோ, எங்களை நேசிக்கின்ற உறவுகளையோ எங்களால் பாதுகாக்க முடியாமல் போய்விடும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025