Princiya Dixci / 2021 ஜூலை 08 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் இந்து சமய கலாசார செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இந்து சமய விவகாரங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், சந்திரகாந்தன் எம்.பி தலைமையில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (06) இடம்பெற்றது.
இக்கலந்துரையடலில் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.உமா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ள இந்து சமய கலாசார செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் அவை தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய செயற்பாடுகள் பற்றியும், மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்தில் இந்து சமய கலாசார செயற்பாடுகளை மேம்படுத்தும் பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.
13 minute ago
33 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
36 minute ago