2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கலாசார நிலையத்தின் மீது தாக்குதல் ; மூவர் காயம்

Kogilavani   / 2017 ஜூன் 09 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்.

ஓட்டமாவடி, மீராவோடையிலுள்ள ஷியா அமைப்பின் கல்வி கலாசார நிலையத்தின்மீது, இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு மேற்கொண்ட தாக்குதிலில் காயமடைந்த மூவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இத்தாக்குதலில் பெருமளவிலான பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினார்.

சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் தாக்குதலை மேற்கொண்டதாக, அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் தலைவர் மௌலவி எல்.ரி.எம்.ஹலீம் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X