2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கல்குடாவில் 4,200 பேருக்கு உலர் உணவு வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு, உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று (24) நடைபெற்றது.

கல்குடா ஜம்இய்யதுல் உலமா, ஸகாத் நிதியம், பிரதான பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள், உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஆகியவைகள் ஒன்றிணைந்து,  கொவிட் 19  ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பு குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

இதில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் பிரதான நிகழ்வு, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, சமூக நிறுவனங்களின் கூட்டமைபின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.ரிஸ்வி மற்றும் நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X