Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிர்வாக மாணவர்களின் பிரச்சினையை, கல்வியமைச்சின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிர்வாக பேராசிரியர் ஜெசங்கரின் நியமனத்தை இரத்து செய்து, தகுதியான ஒருவருக்கு உபவேந்தர் நியமனம் வழங்கக் கோரி, நேற்று (21) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மூன்று வருடகாலம் நிர்வாகப் பேராசிரியராகப் பதவி வகித்துவரும் பேராசிரியர் ஜெசங்கர், பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளைத் தமது சொந்தத் தேவைகளுக்கு ஏற்ப நடத்தி வருவதாகவும் தனது பதவி உயர்வுக்குத் தேவையான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி, மாணவர்களின் கல்வியை சீரழிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரார்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான, துண்டுப் பிரசுரங்களும் ஆர்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த வியாழேந்திரன் எம்.பி, ஆர்ப்பாட்டம் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கையளிக்கப்பட்ட மகஜரையும் பெற்றுக்கொண்டார்.
மகஜரைப் பெற்றுக்கொண்ட அவர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிர்வாகத்தில் இடம்பெறுகின்ற விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago