Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கல்குடாவெம்புப் பிரதேசத்தில் எரிசாராய உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது எனக் கூறி தீர்மானம் எடுக்கப்பட்டது.
கோறளைப்பற்றுப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இப்பிரதேசத்தில் எரிசாராய உற்பத்தி நிலையம் அமைக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் கிழக்கு மாகாணசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் எதிர்க்கும் இத்திட்டத்துக்கு அனுமதிக்கக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், இங்கு எரிசாராய உற்பத்தி நிலையம் அமைக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளதுடன், மாவட்ட அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
5 minute ago
7 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
15 minute ago