Princiya Dixci / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை வினைத்திறன் மற்றும் விளைதிறனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்வித்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்களை, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அதிகாரிகளுடனான சந்திப்புகள், இன்று சனிக்கிழமை (24) இடம்பெற்றது.
காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி ஆகிய இடங்களில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்றன.
கல்வி அபிவிருத்திக்காக வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகளை ஆக்கபூர்வமான நீடித்து நிலைக்கக் கூடிய திட்டங்களுக்காக வினைத்திறன் மற்றும் விளை திறனுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இச்சந்திப்பில் கிழக்கு முதல்வர் கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டு தங்களின் நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் தேவைகளையும், குறைகளையும் எடுத்துக்கூறினர்.
உடனடியாகப் பூர்த்தி செய்யக் கூடிய தேவைகளை உடன் நிறைவேற்றித் தருவதற்கு முதலமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.
இந்நிகழ்வுகளில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஷாம் உடனிருந்தார்.
8 minute ago
10 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
18 minute ago
27 minute ago