Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
தமிழ் மக்கள் கல்வியின் மீது கரிசணையற்றவர்களாக இருக்கின்றனர் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பாலர் பாடாசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளி பாடசாலைகளுக்கு மினி ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (12)நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், இன்று தமிழ் மக்கள் மத்தியில் கல்வியின் மீது கரிசணையற்ற போக்கு இருப்பதை நான் அவதானிக்கின்றேன்.
கடந்த காலங்களில் பல்கலைக்கலைக்கழக அனுமதிகள் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் வேறு துறைசார்ந்த சில முயற்சிகளிலே தமிழ் மாணவர்கள் ஈடுபட்டளவு போல இப்போது இல்லை.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தமிழ் பிரதேசங்களிலே ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், யுத்தம் இடம் பெயர்வு, இராணுவ ஆக்கிரமிப்புக்கள் அச்சத்தினால் வெளிநாடுகளுக்கு இளைஞர் யுவதிகள் சென்றமை போன்ற காரணங்களும் இங்கு முக்கிய காரணங்களாகும்.
எங்களது வாழ்க்கையை செம்மையாக்குவதற்கு கல்வி ஒரு பிரதானமான கருவியாக இருக்கின்றது. கல்வியில்லாத வாழ்க்கையில்லை. சமூகம் சார்ந்த வகையிலும் சரி பொருளாதாரம் சார்ந்த வகையிலும் சரி கல்வி எங்களுக்கு ஒரு ஆயுதமாக இருக்கின்றது. கல்வி மீது ,ளைஞர்களும் யுவதிகளும் கரிசணையாக இருக்க வேண்டும்.
கல்வி எங்களது பெரும் சொத்து எங்களிடமிருந்து அழிக்க முடியாத ஒரு சொத்து எங்களது வீடு வாசல் அழிக்கப்படலாம். பறிக்கப்படலாம். எங்களது வாகங்கள் சொத்துக்கள் அழிந்து விடலாம். ஆனால் எங்களிடமிருந்து கல்வியை அழிக்க முடியாது.
அழிக்க முடியாத சொத்தாக கல்வியைத்தான் கொண்டுள்ளோம். ஆகவே கல்வியை கருவியாக கொண்டு அழிந்து போன எங்களது வாழ்க்கையை பிரதேசங்களின் அபிவிருத்தியை எங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எங்களின் கைவசமிருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வியாகும்.
கல்வியை மிக கவனமாக எமது பிள்ளைகள் மத்தியில் நேர்த்தியானவகையில் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு விடயங்களை Nடீமற் கொள்ள வேண்டும்.
எங்களது கிழக்கு மாகாண சபை எமது மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளை வளர்க்க வேண்டும் என்ற அக்கறையுடன் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முன்பள்ளிகளுக்கு பல உதவிகளை செய்துள்ளார்கள்.
பல ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியர்கள் எந்தவித கொடுப்பனவுமின்றி பணியாற்றி வருகின்றார்கள்.
இவர்களின் நன்மை கருதி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர் வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கிழக்கு மாகாணத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க எமது கிழக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது.
அது தொடர்பான தீர்மானத்தை கிழக்கு மாகாண சபையின் கடந்த அமைச்சரவையில் தீர்மானித்துள்ளோம் அதற்கான ஓர் அமைச்சரவை பத்திரத்தை நான் சமர்ப்பித்து அது அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை எடுத்து வருகின்றோம்.
கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகம் இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. சில முன்பள்ளி ஆசிரியர்கள் கொடுப்பனவை பெறுகின்றார்கள்.
கொடுப்பனவு பெறாத ஆசிரியர்களின் விபரம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றுள்ள தகமைகள் என்பன போன்ற விபரங்களை கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகம பெற்றுவருகின்றது.
எமது முன்பள்ளி ஆசியர்களில் சிலர் குறைந்த பட்ச கல்வித்தகமைகளை கொண்டிராதவர்களும் இருக்கின்றார்கள்.
முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி தகமையுள்ளவர்களாக மாற வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதரப் சாதரண தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் ஆகிய தகமைகளை இப்போதே பெற்றுக் கொள்ள முயலவேண்டும். ஏதாவது உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது இந்த கல்வித்தகமைகள் உங்களை விடுவிக்கும்.
எவ்வாறாயினும் 3,500 முன் பள்ளி ஆசிரியர்களுக்கு இக் கொடுப்பனவை வழங்கப்படும்.சேவைக்காலத்தை அடிப்படையாக கொண்டு இவர்களுக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். எதிர் வரும் ஜனவரி மாதத்திலிருந்து இந்தக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாகும் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
38 minute ago
57 minute ago