2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘கழிவு கொட்டுவோர் தண்டிக்கப்படுவர்’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்பு மாநகர சபை மேயரின் முயற்சியால் மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதியில், கழிவுகளைக் கொட்டுகின்றவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருமருங்கிலும் குளங்கள் காணப்படும் இந்த வீதி, பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியாகும்.

இவ் வீதி, அம்பாறை - கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்டதாகவும் துறைநீலாவணைக் கிராமம், மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்டதாகவும் இருப்பதால் இங்கு கொட்டப்படும் கழிவுகளைப்  பற்றி யாரும் கணக்கெடுக்காத நிலையே காணப்பட்டது.

இந்நிலையில், இப்பிரச்சினையை மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராசா சரவணபவனின் கவனத்துக்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த வீதியில் குப்பைகளைக் கொட்டுகின்ற நபர்களை, விசேட அதிரடிப்படை, பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் கைதுசெய்து, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்கப்படவுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X