Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கும் தூய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்குவதற்கும் ஏற்ற வகையில், திட்டமொன்றுக்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபைப் பிரிவிலும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவிலும் மேற்கொள்ளப்படவிருக்கும் கழிவு நீரைச் சுத்திகரித்து கடலுக்குள் அனுப்பும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பாரிய திட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம், ஏறாவூர் நகர சபையில், இன்று (02) இடம்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிராந்திய முகாமையாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, ஏறாவூர் நகரத்துக்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை மேற்கொண்டு, அதற்கான திட்டத்தைத் தயாரித்துள்ளதென்றார்.
இத்திட்டத்தின் பிரகாரம், கழிவு நீரைச் சுத்திகரித்து, கடலுக்குள் அனுப்புவதற்கான கழிவு நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தை, மக்கள் வசிப்பிடமற்ற கரையோரப் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago
1 hours ago