Editorial / 2020 ஜூன் 04 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - ஏறாவூர், ஐயங்கேணி, ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்ற இளம் குடும்ப பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து, அப்பெண்ணின் 27 வயதுடைய கணவனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் 09 நாள்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவன் - மனைவிக்கிடையே நேற்றுப் பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில், மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால் திருகியதனால் மனைவி உயிரிழந்துள்ளாரென, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கொழும்பு - ஊறுகொடவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் ஏறாவூரில் ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, குழந்தையொன்றுக்குத் தந்தையாகிய நிலையில், முதல் மனைவியை விவாகரித்துச் செய்து, தற்போது கொலைசெய்யப்பட்ட பெண்ணை மணமுடித்திருக்கின்றார் எனவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
14 Nov 2025