2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்புப் பேரணி

Administrator   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

செவிப்புலன் வலுவற்றவர்களின் உரிமை மற்றும்  அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.

சர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இப்பேரணி நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் காரியாலயத்தில் ஆரம்பமான பேரணியானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றது.

பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செவிப்புலன் வலுவற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சமூகத்தில் தாங்கள் ஒதுக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் தமக்கான முறையான கல்வித்திட்டம் அமுலாக்கம் செய்யப்படும்போது சமூகத்தில் சிறந்த நிலைக்கு தங்களால் வரமுடியும் எனவும் செவிப்புலன் வலுவற்றோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களைப்போல் தங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தமக்கு ஏனையவர்கள் போல் சமவுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையில் உள்ள மூவின மக்கள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் செவிப்புலன்வலுவற்றோர் ஒரே மொழியில் ஒன்றுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X