Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஜூலை 30 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைப் பகுதிக்குட்பட்ட பெரியபோரதீவு - பழுகாமம் ஆற்றுப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்குத் தீவைக்கப்பட்டமை தொடர்பில், களுவாஞ்சிகுடி பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆற்றங்கரையைச் சூழவுள்ள நாணற்புற்களிலும் காடுகளிலும், நேற்று (29) இரவு, இந்தத் தீவைப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில், இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக, ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் எனவும், பல பறவைகள் இடங்களைப் பறிகொடுத்த நிலையில், அல்லாடிவருதையும் காணமுடிகின்றது.
குறித்த பகுதிக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.யு.ஐ.குணவர்தன தலைமையிலான குழுவினர், விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, தீயணைப்புப் படையினர் ஆகியோர் இணைந்து, குறித்த தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
கடும் காற்று வீசிவருவதன் காரணமாக, தீ பரவிவருவதைக் காணக்கூடியதாகவுள்ளதுடன், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவென, பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
2 hours ago