Editorial / 2022 ஒக்டோபர் 02 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் 5 நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்த இளைஞன், 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து தடவியல் பிரிவு பொலிஸார் சகிதம் சென்று விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த போது, கடந்த மாதம் 27 ம் திகதி செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய காணாமல் போன இளைஞனே 5 தினங்களின் பின்னர் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதணைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago