Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2020 மார்ச் 04 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு,கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதி அரச காணியை இன்று (04) மதியம் அடைக்க முற்பட்ட சிலர், பொதுமக்களின் எதிர்ப்பால் அங்கிருந்துசென்றுள்ளனர்.
இதன்போது, அப்பகுதிக்கு வந்த பொதுமக்களும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவனும் காணியை அடைக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக காணியை அடைக்கவந்தவர்கள் அங்கிருந்து சென்றதைத் தொடர்ந்து மக்களும் கலைந்துசென்றனர்.
குறித்த காணியை, தொடர்ச்சியாக பல தடவைகள் அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலும் மட்டக்களப்பு மாநகர சபையும் அப்பகுதி மக்களும் அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையிலும், சிலர் அக்காணிகளை அடைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றனர்.
கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் சிபாரிசுக் கடிதத்தை வைத்துக்கொண்டே, குறித்த காணியை அடைக்கமுனைவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதி, மட்டக்களப்பில் வெள்ளம் ஏற்படும்போது நீர் வழிந்தோடும் பகுதியாகவுள்ள நிலையில், அதனை அடைக்கமுனைவதனால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளநேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதி அடைக்கப்படுமானால் கல்லடி பாலம் தொடக்கம் காத்தான்குடி வரையான பல பகுதிகள் மழைக் காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
18 minute ago