2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடிக்கு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கம்பஹா மாவட்டத்தின் வியாங்கொடையிலிருந்து காத்தான்குடிக்கு வந்த நபரொருவர், குடும்பத்துடன் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். 

வியாங்கொடைப் பிரதேசத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் காத்தான்குடியைச் சேர்ந்த நபரே, நேற்று (07) காத்தான்குடிக்கு வருகை தந்துள்ளார்.  

இதையடுத்து, அங்கு சென்ற காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அவருக்கு வழங்கிய ஆலோசனையை அடுத்து, அவரது குடும்பத்துடன் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். 

இந்நபரையும் அவரது குடும்பத்தாரையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கம்பஹா மாவட்டத்திலிருந்து, செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து காத்தான்குடிக்கு யாராவது வந்திருந்தால் காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்துக்கோ காத்தான்குடி மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.பசீர் அல்லது காத்தான்குடியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கோ தெரியப்படுத்துமாறு, காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகம் அறிவித்துள்து.  

அவ்வாறு அறிவிக்காமல் மறைந்திருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவ்வலுவலகம் எச்சரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .