Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று முதல் நடைபெற்றுவரும் இலவச கண்சத்திர சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் நன்மையடைந்துள்ளனர் என, சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இம்ரான் ஜமால்டீன் தெரிவித்தார்.
இந்த வைத்திய முகாம், எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதாகவும் சுமார் 1,000 பேருக்கு சிகிச்சை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர்.
சர்வதேச நிவாரண அமைப்பும் காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையும் இணைந்து, மாபெரும் கண் சத்திரசிகிச்சை முகாமை, காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொண்டு வருகின்றது.
பாகிஸ்தான் மற்றும் ஜித்தா ஆகிய நாடுகளில் இருந்துவருகைதந்த வைத்திய நிபுணர்கள் குழுவினர், இந்த சத்திர சிகிச்சை முகாமை நடத்துகின்றனர்.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜாபீர் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது.
ஜனாதிபதி, பிரதமரின் “சகவாழ்வைக் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், இந்த வைத்தியமுகாமில் அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுவதாகவும் சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025