2025 மே 22, வியாழக்கிழமை

காத்தான்குடியில் கத்திமுனையில் கொள்ளை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-06, நூரணியா மையவாடி வீதியிலுள்ள வீடொன்றில், இன்று (23) அதிகாலை 4 மணியளவில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

வீட்டின் கூரையைப் பிரித்து நுழைந்த முகமூடி அணிந்திருந்த நான்கு கொள்ளையர்களால், குழந்தையுடன் தனியாக இருந்த தனது மனைவியிடம், கத்திமுனையில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டதோடு, மனைவி மற்றும் குழந்தை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனரென, குறித்த வீட்டு குடும்பத் தலைவர், பொலிஸில் முறையிட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .