Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று, இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி 3ஆம் குறிச்சி கல்மீசான் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வந்த 52 வயதுடைய பெண்ணின் சடலமே கிணற்றிலிருந்தே, இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரும் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், நகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஜவாஹிர் உட்பட புதிய காத்தான்குடி ஜனாசா நலன்புரிச் சங்கத் தொண்டர்களின் உதவியடன் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த பெண் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மன நோயாளியாக இருந்து வருவதுடன் அதற்கான சிகிச்சையையும் பெற்று வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago