Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில், பெண்கள் வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமாகிய தேசபந்து சல்மா ஹம்சாவுக்கு, சிறந்த ஆசிரியை விருது வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தாய்லாந்தில் வதிவிடப் பயிற்சிச் செயலமர்வொன்றில் கலந்துகொண்டபோது, இவ்விருது வழங்கப்பட்டது. இவருடைய சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வேலைகளைப் பார்வையிட்ட ஐக்கிய அமெரிக்கத் தூதுவர்,பாங்கொக்கில் வைத்து இவ்விருதை வழங்கிக் கௌரவித்தார்.
பெண்களை சமூக, பொருளாதார, அரசியல் இரீதியாக எவ்வாறு முன்னேற்றலாமென்றும் அதற்கான பிரச்சினைகள் தீர்வுகள் போன்றவைகள் பற்றியும், தனது கடந்த கால அனுபவங்கள் மூலம் சவால்களை எவ்வாறு எதிர்நோக்கலாமென உரை நிகழ்த்திய சல்மா ஹம்சாவுக்கு, தாய்லாந்துக்கான ஐ.அமெரிக்கத் தூதுவரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் 25க்கும் மேற்பட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிலிருந்து, சுமார் 120 பேர் பங்குபற்றினர். இதில், ஏனைய நாடுகளிலிருந்து பெண் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் போன்றவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025