Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 07 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, காத்தான்குடி பொலிஸாரின் விசேட கூட்டம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) நடைபெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத வன்முறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
முஸ்லிகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத தாக்குதல்கள் சம்பந்தமாக அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் மிகக் கவலையடைவதாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
மேலும் ஏனைய பிரதேசங்களுக்கு இவ்வன்முறைச் சம்பவங்கள் பரவாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.
இன வன்முறையைத் தூண்டும்வகையில் நடந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025