Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 மார்ச் 07 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் இறப்புக்கான காரணங்களைக் இனங்கண்டு தீர்வு வழங்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் கோரி, செங்கலடி நகரில் நேற்று (06) ஆர்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
“மாவட்டத்தில் கால்நடைகளின் மேயச்சல் தரைப்பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் கால்நடைகள் சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுவதற்கு வன இலாகா அதிகாரிகள் தடை விதித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் அடையாளப்படுத்தி, வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
“கால்நடைகளின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நீர்த் தடாகங்கள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும்.
“கால்நடைகளின் இறப்புத் தொடர்பாக ஆய்வு செய்து, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த விசேட திட்டம் உருவாக்க வேண்டும்.
“பண்ணையாளர்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு, வாரத்தில் இரு நாள்கள் கள விஜயம் மேற்கொள்ளக்கூடியளவுக்கு செயற்றிட்டம் உருவக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்ஜித், மாநகரசபை உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பவதாரணி கோபிகாந்திடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago